தமிழக அரசுக்கு கடிதம் எழுதுவோம்! குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்போம்!

கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் அதன் பரவலை  தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளினால் குழந்தைகள் பலவித இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். வீட்டிற்குள்ளும், வெளியேயும் குழந்தைகள் மீது எண்ணற்ற கொடுமைகள் மற்றும் சுரண்டல்கள் நடைபெற்று வருகின்றன. சைல்டுலைன் இந்தியா (CHILD LINE INDIA) தரவுகளின்படி நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் 11 நாட்களில் மட்டும் குழந்தைகள் மீதான கொடுமைகள் மற்றும் வன்முறைகள் குறித்த 92,000 புகார் அழைப்புகள் வந்துள்ளது.

குடும்பத்தின் வாழ்வாதாரம் இழப்பு மற்றும் கடினமான பொருளாதார நெருக்கடி காரணமாகப் பல குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறி குழந்தைத் தொழிலாளர்களாக மாறுவதுடன் பாலியல் வன்கொடுமை மற்றும் உடல் அளவிலான கொடுமைகளுக்கும் ஆளாக நேரிடும் ஆபத்து உள்ளது.   குழந்தைகள் மீதான கொடுமைகள், குழந்தைத் திருமணங்கள், குழந்தைகள் கடத்தப்படுதல் போன்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொறுப்புணர்ந்த  குடிமக்கள் என்ற வகையில்,  நம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அதற்காக அரசிடம் குழந்தை நல பாதுகாப்பு கொள்கைகளை செயல்படுத்த கோருவதும் அவசியமாகிறது.

 ‘நம் பாதுகாப்பு, நமது உரிமை பிரச்சாரத்தின் மூலம், அம்னெஸ்டி இன்டர்நேஷ்னல் இந்தியா அமைப்பு சமூக கல்வி நிறுவனத்துடன் இணைந்து 2018 முதல் தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பயிற்சி மற்றும் தேவையான கருத்து வளங்களை வழங்கி வருகிறது. இதன் மூலம்  வன்கொடுமைகளை  எதிர்த்துப் போராடும் திறன் பெற்றவர்களாக  குழந்தைகளை  தயார்படுத்த முயற்சி எடுத்து வருகிறது.

தற்போதைய நெருக்கடியான சூழலில் குழந்தைகளின் பாதுகாப்பை மாநிலக் கொள்கைகளில் இணைத்து, அவை திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய  வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கு நம் அனைவரின்  ஒத்துழைப்பு  தேவைப்படுகிறது. எனவே குழந்தைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கவும், அத்தியாவசிய மாற்றங்களைச் செய்யவும் வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுமாறு அனைவரையும் அழைக்கின்றோம்.

The following email will be sent

To: மாண்புமிகு திரு.எடப்பாடி க. பழனிசாமி, முதலமைச்சர்-தமிழக அரசு

Subject: மாண்புமிகு முதலமைச்சர் அய்யா அவர்களுக்கு